தங்கராசா உதயராசா (குமார்) என்று அழைக்கப்படுகின்ற
எனது விபரம் :
அன்றொரு நாள் இரவு ஆழ்ந்த தூக்கத்தின் போது இறைவனும் இறைவியும் சேர்ந்து நாங்கள் உமக்குள் வரப்போகின்றோம் என்று கேட்டனர். நானோ உங்களைத் தாங்கும் சக்தி எனக்குள் இல்லை என்று மறுத்து இருவரையும் கைகூப்பி வணங்கி எனது விடயத்தைக் கேட்கும் பொழுது இருவரும் மறைந்து விட்டனர்.
அதன் பின்னர் எனது உடலிலும் மனதிலும் ஒரு மாற்றமும் உந்துசக்தியும் ஏற்பட்டது. இன்ன இடத்துக்கு வா என்று உணர்த்தப்படும் மனமும் அதைத் தூண்டும். இதன்படி ஒழுங்குகள் செய்து அவ் யாத்திரைகளை முடித்துக் கொள்வேன். அங்கு கிடைக்கின்ற புனித நீர் மற்றும் இறையை உணர்த்தும் சாலக்கிராமம் போன்றவற்றை இலங்கைக்கு கொண்டு செல் என்று மனம் தூண்டும். இலங்கைக்கு கொண்டு வந்து கதிர்காமம் முதல் இலங்கையின் பல முக்கியமான இடங்களிலும் உள்ள ஆலய அபிசேகங்களும் செய்யப்பட்டுள்ளது. இவற்றில்
1. யுத்தம் நிறைவுற்றதும் கைலாயம் அழைத்த எம்பெருமான் புனித கங்கை தீர்த்தத்தினைத் தந்து இலங்கையைப் புனிதப்படுத்தும்படி உணர்த்தப்பட்டது.
2. யாத்திரிகைளின் இறுவெட்டு ஒளி ஒலித் தொகுப்பு நிகழ்ச்சிகளும் ஆக ஒரு வருடத்திற்கு ஒரு செயற்பாடு தரப்பட்டன.
a. பஞ்ச பூதங்கள்
b. சரவணபவன்
c. நாரயணியம்
d. பாற்கடல் கடைதல் என்ற தலைப்புக்கள் மூலம் பாடசாலைகள்,
ஆலயங்கள் என ஆன்மீக உரைகளுடன் கூடிய காட்சிப்படுத்தலும்
செய்யப்பட்டுள்ளன.
3. இலங்கையில் ஒட்டுமொத்தமாக யுத்தத்திலும் அதற்கு முன்னரும் இறந்த அனைவருக்குமாக முள்ளிவாய்க்காலில் ஆத்மசாந்திப் பூசையொன்றைச் செய்வதற்கு அனுமதியும் விடையும் தரப்பட்டடு அதன் அமைவாக அது நடாத்தப்பட்டு இதன் அமைவாக காசி, கயா, பிரயாகை, பத்திரிநாத், கேதாரநாத் ஆகிய இடங்களில் கட்டங்கட்டமாக இறந்தவர்களுக்கான திதிகள் கொடுக்கப்பட்டு முள்ளிவாய்க்காலிலும் அந்த ஆத்மசாந்தி நிகழ்வு நடாத்தப்பட்டு மாமாங்க ஈஸ்வரர் ஆலயத்தில் 2019 ஆம் ஆண்டு ஆடி அமாவாசைத் தீர்த்தத்தன்று நிறைவாக்கப்பட்டது.
அரசியல் :
1. 2015 பொதுத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடவைத்து காலச்சுழற்சித் தத்துவத்தின்படி இலங்கையில் குபேரனின் ஆட்சி நடைபெறக் காத்திருக்கிறது. எனவே இலங்கையை சீர்செய்ய வேண்டிய தேவையும் ஆன்மீக அரசியல் தீர்வுமாக அறிவிக்கப்பட்டு தெரிவிக்கப்பட்டது. இதன்படி அன்றைய ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன, பிரமதர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன், அப்போதைய இந்திய உயர்ஸ்தானிகர் டிக்சிங், இந்தியப் பிரதமர் மோடி ஆகியோருக்கும் அனைத்து விடயங்களும் அறிவிக்கப்பட்டது.
2. 2019 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைகின்றவர் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதும் கைலாயநாதரின் ஆசியை என் மூலமாக மாமாங்க ஈஸ்வரர் ஆலயத்தில் வாங்கிக்கொள்ளும் பட்சத்தில் இலங்கையை ஓரளவுக்கு பொருளாதாரக் க~;டத்தில் இருந்து பாதுகாக்கலாம் என்பதனையும் இலங்கையில் எதிர்பார்ப்பதை விட பல வளங்கள் உள்ளது அவை அனைத்தும் மறையும். காரணம் இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் பயன்படாமல் போகும் என்பதனால்.
3. இலங்கையின் தீவடிவ வரைபடம் ஒன்றைக் காட்டி இலங்கைக்குள் தீமை செய்யும் நோக்கில் யாரும் உள்ளே வரமுடியாது என்றும் இலங்கையின் சொத்துக்களை யாரும் அபகரித்து வெளியில் கொண்டுசெல்ல முடியாது என்றும் மீறினால் தண்டிக்கப்படுவர் என்றும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும்படி கூறினார். அதன்படி அனைத்து விடயங்களும் செய்யப்பட்டன. ஆனால் அவர்கள் எதுவும் என் மூலம் செய்ய மனம் விரும்பாமால் நன்றி சொல்லி பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்~ அவர்களிடம் இருந்து எனக்கு ஒரு நன்றிக் கடிதம் மட்டும் வந்தது. அதற்கான பதிலும் அத்துடன் பிரதமர் அவர்களைச் சந்திப்பதற்கும் வாய்ப்புக் கேட்டும் தகவல் கடிதம் அனுப்பியிருந்தேன். எதுவும் இன்னமும் நடக்கவில்லை என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஒன்றைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என் மூலமான இறை ஆசியைப் பெற்றுக்கொள்ளாமல் இலங்கையின் அரசியலை யாரும் வெற்றிகொள்ள முடியாது. நடைமுறை அரசியல் மாத்திரம் நடைபெறும் என்பதனையும் குறிப்பிட விரும்புகிறேன்.
இறை மூலமாக எனக்குச் சொல்லப்பட்ட விடயங்களை நான் எனது உடம்பை வருத்திய உழைப்பைத்தான் இலங்கைக்காக விதைத்திருக்கின்றேன். இதன் விளைவாகவே நானே இலங்கையின் அரசன் ஆவது என்பதையும் காசியில் வைத்து காசி விஸ்வநாதரை அர்ச்சனை செய்தவேளையில் அது எனக்குத் தரப்பட்டது. அதற்காக சிவ அகோரியும் அவ்விடத்திலேயே கிடைக்கப்பெற்றதுடன் அந்தக் காலத்தில் எனக்கு மனைவியாய் அமையப்போகிறவளையும் அழைத்துக் காட்டியிருந்தார். அவள்கூட ஒரு சிவபக்தைதான்.
2020 இல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்ட போது நான் மனவேதனை அடைந்தேன். அதன் விளைவாக என்னிடம் சோழத்தம்பி என்ற வார்த்தையுடன் பார்வதி தேவியின் வருகையை ஆழ்ந்த தூக்கத்தில் கண்டேன். பின்னர் முரக்கொட்டாஞ்சேனை மாரியம்மன் ஆலய கும்பாபிN~கத்திற்கு புனித தீர்த்தங்கள் கொடுக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டு கும்பாபிசேகத்திலும் கலந்து கொண்டேன். அன்றைய இரவு ஆழ்ந்த தூக்கத்தில் எல்லாம் வல்ல பரம்பொருளும் பார்வதி தேவியுமாய் வந்த சோழர்களின் தெய்வமான சோழப் பேரரசே என்றார்கள். ஆனால் என்னால் நம்ப முடியாமல் இருந்தது. இது ஊர்ஜிதப்படுத்தப்பட்டும் விட்டது. இதன் பின்னர்தான் எனக்கொரு விடயம் நினைவிற்கு வந்தது. இந்தியாவில் பத்திரிநாத், கேதாரநாத் யாத்திரிகைள் முடிவுற்ற பின் இந்தியாவிலுள்ள சோழர்களின் ஆலயத்திற்கு ஓர் நிகழ்விற்காக செல்லவேண்டி இருந்தது. அந்த நிகழ்வும் இனிமையாகவும் பரிபூரணமாகவும் இறை ஆசியுடன் நிறைவேற்றப்பட்டது. அவ் ஆலயத்தை சுற்றிலும் ஓர் இறை அருள் இருப்பதனை உணர்ந்தேன். இவ் வித்தொன்று அன்றே இடப்பட்டது. இது இறைசெயல் என்னால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. இப்பிறவியிலேயே சோழர்களின் தெய்வமான சோழப் பேரரசு என்பதற்கான அடித்தளம் இடப்பட்டுவிட்டது. மறு பிறவி நடக்கும் வரை தற்போதைய உடலை விட்டு உயிர் பிரிந்து சொர்க்கத்தில் வாழும்.
அனைத்தும் இறை செயலே.